இங்கிலாந்தின் University of Surrey வழங்கும் ஆசியாவின் முதல் Digital Health முதுகலைப் பட்டப்படிப்பு பாடநெறியை இலங்கையில் அறிமுகப்படுத்தும் IIHS

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதாரக் கற்கை நிறுவனமான International Institute of Health Sciences (IIHS) இங்கிலாந்தின் University of Surrey வழங்கும் ஆசியாவின் முதலாவது Digital Health முதுகலைப் பட்டப்படிப்பு பாடநெறியை தொடங்குவதன் மூலம் பிராந்திய சுகாதாரக் கல்வி மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்துறையில் தனித்துவமான தடத்தை பதித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சுகாதார கட்டமைப்புகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தம்மை வடிவமைத்துக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், சுகாதார சேவைகளை வழங்குவதிலும் நிர்வகிப்பதிலும் தொழில்நுட்பம், தரவுகள் மற்றும் புதுமைகளை ஒருங்கிணைக்கக்கூடிய தொழில் வல்லுநர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. புதிய Digital Health முதுகலைப் பட்டப்படிப்பு இந்தத் தேவையை நிறைவேற்றுவதோடு சுகாதாரக் கட்டமைப்புகளில் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தக்கூடிய திறனையும் அறிவையும் மாணவர்களுக்கு வழங்குகிறது.
இலங்கையின் IIHS நிறுவனத்தில் நடைபெறும் இந்த கற்கை பாடநெறி, மாணவர்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேறாமல் ஒரு மதிப்புமிக்க பிரித்தானிய பட்டத்தைப் பெற வாய்ப்பளிக்கிறது. இந்தப் பாடநெறி, டிஜிட்டல் சுகாதார கட்டமைப்புகள், சுகாதாரத் தகவலியல் (Health Informatics),, தரவு பகுப்பாய்வு, டிஜிட்டல் தலைமைத்துவம் மற்றும் நவீன சுகாதார தொழில்நுட்பங்கள் ஆறியவற்றை உள்ளடக்கிய நடைமுறை பயன்பாட்டுடன் கல்விச் சிறப்பை ஒருங்கிணைக்கிறது. இந்தப் பாடநெறி ஆரம்ப பட்டம் பெற்றவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சுகாதார சூழல்களில் தலைமைப் பதவிகளை வகிக்க விரும்பும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் தொடர்புடைய சுகாதார தொழில் வல்லுநர்கள், அமைப்பு சார்ந்த மாற்றங்களை வழிநடத்தும் சுகாதார முகாமையாளர்கள், பொதுச் சுகாதார மற்றும் அபிவிருத்தித் துறையின் தொழில் வல்லுநர்கள் ஆகியோருடன் தகவல் தொழில்நுட்பம், தரவு விஞ்ஞானம், பொறியியல், உயிரியல் மற்றும் முகாமைத்துவம் துறை சார்ந்த பட்டதாரிகளுக்கு இந்தப் பாடநெறி மிகவும் பொருத்தமானது. முன் தொழில்நுட்ப பின்னணி தேவையில்லை என்பதால், டிஜிட்டல் சுகாதாரத் தலைமைக்கு மாற விரும்பும் தொழில் வல்லுநர்களுக்கும் இதில் சேர முடியும்.
டிஜிட்டல் சுகாதாரம் இன்று உலகில் துரிதமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். மருத்துவமனைகள், சுகாதார அமைச்சுகள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்தியில் டிஜிட்டல் தீர்வுகளில் குறிப்பிடத்தக்க முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. இப்பட்டதாரிகளுக்கு Digital Health Specialist, Health Informatics Manager, Healthcare Data and Analytics Manager, Telemedicine Programme Lead, Digital Transformation Manager, Health Technology Project/Product Manager மற்றும் Digital Public Health Specialist போன்ற பதவிகளில் சேரலாம். இந்தத் துறைக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சர்வதேச தொழில் வாய்ப்புகளுக்கு இப் பாடநெறி வழிவகுக்கிறது. இப் புதிய பாடநெறியின் அறிமுகம் குறித்து IIHS தலைமை நிறைவேற்று அதிகாரி டாக்டர் கித்சிறி எதிரிசிங்க கூறுகையில், “டிஜிட்டல் சுகாதாரம் என்பது சுகாதார சேவையின் எதிர்காலம். University of Surrey உடன் ஆசியாவின் முதல் டிஜிட்டல் சுகாதார முதுகலைப் பட்டத்தை வழங்குவதன் மூலம் நாம் தொழில் வல்லுநர்களுக்கு சர்வதேச தொழில் வாய்ப்புகளைத் திறந்து, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த பங்களிப்பு செய்திடுவோம்”என்றார். University of Surrey பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில், இப்பாடநெறி உயர் தரத்திலான கல்வியையும் பயன்பாட்டு நடைமுறையையும் ஒருங்கிணைத்து உலகளாவிய சுகாதாரத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டனர். பிராந்திய மற்றும் சர்வதேச தரங்களுடன் இணைந்த ஒரு சுகாதார கற்கை நிலையமாக IIHS ஐ மேலும் வலுப்படுத்துவதன் மூலம் “Study Sri Lanka” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இத் திட்டம் மேலும் வலு சேர்க்கிறது. Digital Health முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கைகள் இப்போது இடம்பெறுகின்றன. மேலும் தகவல்களை பெற www.iihs.lk ஐப் பார்வையிடவும்.