Deen Brothers Imports தனியார் நிறுவனத்துக்கு Entrepreneur of the Year 2025 இரட்டை தங்கப் பதக்க விருதுகள்

இலங்கையின் கமத்தொழில், கைத்தொழில், பொறித்தொகுதிகள், தொழில்நுட்ப மற்றும் மின்சார உபயோகப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு மத்தியில் முதன்மை நிறுவனமாக திகழும் Deen Brothers Imports தனியார் நிறுவனம் Entrepreneur of the Year 2025 விருது விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழாவில் தேசிய மட்டத்திலான பாரியளவிலான பிரிவின் தங்க பதக்க விருதையும் மாகாண மட்டத்திலான (தென் மாகாணம்) பாரியளவிலான பிரிவின் தங்கப் பதக்க விருதையும் அந் நிறுவனம் வென்றுள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவு பூராவும் விரிந்துள்ள வலுவானதொரு விநியோக வலையமைப்பை கொண்டுள்ள Deen Brothers Imports தனியார் நிறுவனம் இத் துறையில் முன்னோடியாக கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் பெற்ற நம்பகத்தன்மை இதன் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. மேற்படி நிறுவனம் Oregon, Dongcheng, Briggs & Stratton, Toptul, Golden Bridge, Norton போன்ற பல்வேறு சர்வதேச அங்கீகாரம் பெற்ற வர்த்தகநாமங்களின் இலங்கை முகவராக செயற்படுகின்றது. இந் நிறுவனம் DBL வர்த்தகநாமத்தின் கீழ் சந்தைக்கு விநியோகிக்கும் கமத்தொழில், கைத்தொழில், தச்சு, கட்டுமான சாதனங்கள், பொறித்தொகுதிகள், மின்பிறப்பாக்கி இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், வீட்டுபயோக மின்சார சாதனங்கள் ஆகியவற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட உத்தரவாதச் சான்றிதழுடன் விற்பளைக்குப் பிந்திய சிறந்த சேவையினையும் வழங்குகிறது. விருதுகள் குறித்து கருத்து தெரிவித்த Deen Brothers Imports நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தேசமான்ய கலாநிதி எம்.என்.எம். நஜீப் டீன் “வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதத்துடன் கூடிய உயர் தரத்திலான சாதனங்களை வழங்குவதே எமது நோக்கமாகும். அவர்கள் எம்மீது வைத்த நம்பிக்கை மற்றும் அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு கடந்த காலம் முழுவதும் நாம் பெற்ற வெற்றிகளுக்கு பெரிதும் செல்வாக்கு செலுத்தியுள்ளது. இவ்வாறான வெற்றிகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நிலைபேறானதும் வெற்றிகரமானதுமான வணிகப் பழக்கங்களுடன் எமது தாய் நாட்டின் எதிர்கால பயணத்துக்கு பங்களிப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” என்றார்.