Travellers’ Choice வழங்கும் Best of the Best விருதை வென்றுள்ள உலகின் 1% ஹோட்டல்களின் பட்டியலில் இணைந்துள்ள EKHO Ella ஹோட்டல்

மலைநாட்டின் ரம்யமான சூழலில் அமைந்துள்ள EKHO Ella ஹோட்டல் 2025 ஆம் ஆண்டுக்காக Tripadvisor Travellers’ Choice வழங்கும் Best of the Best விருதை வென்றுள்ளது. உலகளவிலுள்ள ஹோட்டல்களில் 1% ஹோட்டல்களுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் EKHO Ella ஹோட்டல் அந்த பட்டியலில் இணைந்துள்ளமை இமாலயச் சாதனையாகும். விருந்தினர்களின் கருத்துக்கள் மற்றும் தரப்படுத்தல்களின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் புகையிரதச் சேவையை அடிப்படையாக கொண்டதொரு எண்ணக்கருவுக்கமைய வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் மிகச் சிறந்த சேவையினை வழங்கி வருகிறது. தொடர்ச்சியாக உயர் தரச் சேவையினை வழங்கி வரும் ஒரு சில தொழில்முயற்சிகளுக்கு Best of the Best வழங்கப்படுவதோடு அவ்வாறனதொரு தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளமை பெரும் திருப்புமுனையாகும்.
இந்த வெற்றியை தொடர்ந்து EKHO Ella பணியாட்டொகுதியை கௌரவிக்கும் விழாவொன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. விருந்தினர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பையும் சேவையினையும் வழங்கி வரும் பணியாளர்கள் அனைவரும் இதன் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர். “Tripadvisor வழங்கும் Best of the Best விருதை வென்ற உலகளவிலான ஹோட்டல்கள் மத்தியில் நாமும் இருப்பதையிட்டு பெருமிதம் கொள்கிறோம். உயர் விருந்தோம்பல், சொகுசு வசதிகள் மற்றும் கலாசாரப் பண்புகளின் கலவையான உருவாக்கத்துக்காக நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இதன் மூலம் பிரதிபலிக்கிறது. எமது புகையிரதச் சேவையை தொனிப்பொருளாக கொண்ட எண்ணக்கருவின் மூலம் நாட்டின் மலைநாட்டுப் புகையிரதச் சேவை பயணத்திலுள்ள வனப்பை உலக அரங்குக்கு கொண்டு செல்ல எம்மால் முடிந்துள்ளது.” என CHC ஹோட்டல் குழுமத்தின் உப தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) ஏட்ரியன் ஜேன்ஸ் தெரிவித்தார். EKHO Ella ஹோட்டலின் சகல அறைகளும் பிரபல்யமான புகையிரதங்களை அடிப்படையாக கொண்டதொரு எண்ணக்கருவின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பழைய புகையிரத இருக்கைகள், ஒளி சமிஞ்சை விளக்குகள் மற்றும் இதர புகையிரதப் பாகங்களை நினைவூட்டும் வகையில் அறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஹோட்டலிலிருந்து குட்டி சிவனொளிபாதம் மற்றும் ஒன்பது வளைவுப் பாலம் போன்ற பிரசித்தமான இடங்களுக்கு எளிதில் பயணிக்க முடியும். மரபு சார்ந்த மற்றும் கலாசார அடையாளங்களை அடிப்படையாக கொண்ட சிறியளவிலான ஹோட்டல்களுக்கு சர்வதேச அளவில் கிடைக்கும் கூடுதல் கவனத்தையே இந்த விருது பிரதிபலிக்கிறது. ஹோட்டலின் உணவகம் மற்றும் மது அருந்துமிடத்துக்கு நாட்டின் முக்கிய ஆறுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. உணவகம் அமைந்துள்ள இடத்திலேயே பயிரிடப்படுகின்ற பயிர்களிலிருந்து பெறப்படுகின்ற பொருட்களிலிருந்து சமைக்கப்படுகின்ற உணவுகளை சுவைத்து மகிழும் வாய்ப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலாசார ரீதியான அனுபவங்கள், நிலைபேறான அனுகுமுறைகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை வலுவூட்டுவதன் மூலம் வலுவானதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே ஹோட்டலின் எதிர்கால நோக்கமாகும். புகையிரதப் பாரம்பரியத்துடன் கலந்த மலைநாட்டின் அழகை ரசிப்பதற்கு வருமாறு EKHO Ella உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வாஞ்சையுடன் அழைக்கின்றது.


