தமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ள Embilipitiya Stores Tool & Ceramic Manufacturing நிறுவனம்

இலங்கையின் செரமிக் குளியலறை உபகணரத் தொகுதி உற்பத்தித் துறையின் முன்னோடியாக திகழும் Embilipitiya Stores Tool & Ceramic Manufacturing தனியார் நிறுவனம் தமது செரமிக் தொழிற்சாலையின் மாதாந்த உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக, இதுவரை 100,000 சதுர அடியாக இருந்த அதன் உற்பத்தித் தளத்தை 145,000 சதுர அடி வரை 45 சதவீதத்தால் விரிவுபடுத்தியுள்ளது. அந்தவகையில், தற்பொழுது அந் நிறுவனம் மாதமொன்றுக்கு உற்பத்தி செய்யும் 3,500 குளியலறை உபகரணத் தொகுதிகளை (Bathroom Sets) 5,000 ஆக உயர்த்தி, நாட்டின் துப்புரவேற்பாட்டு உபகரண தொழிற்சாலைகளுக்கு இடையே மாதாந்த உற்பத்தித் திறனில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Embilipitiya Stores Tool & Ceramic Manufacturing நிறுவனத்தின் ‘Eagle’ வர்த்தகநாமம் (Brand), இலங்கையில் மிகவும் நம்பகரமான துப்புரவேற்பாட்டு உபகரண வர்த்தகநாமமாக மாறியுள்ளது. உயர்தர மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மேற்படி குளியலறை உபகரணங்கள், 25 வருட உத்தரவாதத்துடனான உள்நாட்டு உற்பத்தியாக திகழ்வதும், சந்தையில் மலிவு விலையில் கிடைப்பதுமே அதற்குக் காரணமாகும். செரமிக் உற்பத்திகளுக்கு மேலதிகமாக, இந்நிறுவனம் உயர்தர ஸ்கிம் கோட் (Skim coat), டைல் மோட்டார் (Tile mortar), கம்பி ஆணிகள், முட்கம்பிகள், சிரப் மற்றும் அது சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப நாடு முழுவதும் விநியோகம் செய்கிறது. 1960-களில் திரு. சீமன் பெரேரா அவர்களால் எம்பிலிபிட்டியவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட Embilipitiya Stores, கடந்த ஆறு தசாப்தங்களாக நாட்டின் கட்டுமானத் துறையில் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி வழங்குநராக தடம் பதித்துள்ள நிலையில், தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. உதயநாத் பெரேரா அவர்களின் வழிகாட்டலில், Embilipitiya Stores Tool & Ceramic Manufacturing Pvt Ltd என்ற பெயரில் ஒரு குழும நிறுவனமாக (Group of Companies) இயங்கி வருகிறது. இன்றளவில் இந்நிறுவனம் விவசாயம், விடுதி வசதிகள் (Resorts) போன்ற பல துறைகளில் தமது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது. கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொழிற்சாலைகளை நிறுவி பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள ஈகிள் குழுமம், நாட்டின் பொருளாதாரத்திற்கு கனிசமான பங்களிப்பை வழங்குவதோடு, எதிர்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை வெற்றிகொள்ளத் தனது வணிக உத்திகளை மேலும் விரிவுபடுத்தி வருகின்றது.

Share