Eagle Bath Ware நிறுவனத்தின் முதலாவது காட்சியறை எம்பிலிபிடியவில் திறப்பு

ஈகிள் குழுமத்தின் (Eagle Group) இணை நிறுவனமான Embilipitiya Stores Tool & Ceramic Manufacturing தனியார் நிறுவனத்தின் முதலாவது செரமிக் துப்புரவேற்பாட்டு உபகரண உற்பத்திகள் மற்றும் டைல்ஸ் காட்சியறை ‘ஈகிள் பாத் வேர்’ (Eagle Bath Ware) எனும் பெயரில் எம்பிலிபிட்டிய நகரில் திறக்கப்பட்டுள்ளது. மிக இலகுவாக அணுகக்கூடிய வகையில் எம்பிலிபிட்டிய நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்காட்சியறையில், வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப உயர்தரத்திலான பல்வேறு வகையான குளியலறை தொகுதிகள் (Sanitaryware), தரை மற்றும் சுவர் டைல்ஸ்கள், டைல் மோர்டார், புட்டி (Putty) மற்றும் ஏனைய குளியலறை உபகரணங்களை உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீடு, அலுவலகம், வணிக நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களுக்கும் தேவையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் கொள்வனவு செய்யும் வாய்ப்பை இந்த காட்சியறைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பெற முடியும்.
1960-களில் திரு. சீமன் பெரேரா அவர்களால் எம்பிலிபிட்டியவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த ஆறு தசாப்தங்களாக நாட்டின் கட்டுமானத் துறையில் மூலப்பொருட்கள் மற்றும் பல்வேறு உற்பத்திகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. அதன் தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. உதயநாத் பெரேரா அவர்களின் வழிகாட்டலில் இது ஒரு பெரும் குழுமமாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் 25 வருட உத்தரவாதத்துடன் கூடிய உள்நாட்டு செரமிக் உற்பத்திகள் மற்றும் கட்டிடப் பொருட்களை சந்தைக்கு வழங்கி வருகிறது. கடந்த 65 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சிநேகபூர்வமான சேவையை வழங்கி வரும் ‘Eagle Bath Ware, ஒரு நம்பிக்கைக்குரியதும் முதன்மை தெரிவுக்குரியதுமான துப்புரவேற்பாட்டு உபகரண உற்பத்தி நாமமாக மாறியுள்ளது. தற்போது விவசாயம் மற்றும் விடுதிகள் (Resorts) போன்ற பல்வேறு துறைகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ள ஈகிள் குழுமம், கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகளை நிறுவி ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு கனிசமான பங்களிப்பை வழங்கி வரும் இந்நிறுவனம், எதிர்காலத்தில் நாடு முழுவதும் ‘Eagle Bath Ware காட்சியறைகளைத் திறந்து வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது.
